சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல்
சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல்
சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல்
ADDED : ஆக 28, 2011 01:08 AM
கோவை:முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தமிழகத்தை சேர்ந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சட்டக் கல்லூரி மாணவர்கள், நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராஜிவ் கொலை வழக்கில், தமிழகத்தை சேர்ந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு, வரும் 9ம் தேதி தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது; இதை ரத்து செய்ய வலியுறுத்தி, பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் நேற்று, சட்டக் கல்லூரி மாணவர்கள் 22 பேர், சென்னை செல்ல தயாராக இருந்த ரயில் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல் துறை உதவி கமிஷனர் அய்யாசாமி, பி4 ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், ரயில்வே போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், உடன்பாடு ஏற்படாததால், மாணவர்களை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.


