Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/சிறுவாபுரியில் 14ம் தேதி வள்ளி கல்யாண மகோற்சவம்

சிறுவாபுரியில் 14ம் தேதி வள்ளி கல்யாண மகோற்சவம்

சிறுவாபுரியில் 14ம் தேதி வள்ளி கல்யாண மகோற்சவம்

சிறுவாபுரியில் 14ம் தேதி வள்ளி கல்யாண மகோற்சவம்

ADDED : ஆக 07, 2011 12:56 AM


Google News

சென்னை : சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும் 14ம் தேதி, வள்ளி கல்யாண மகோற்சவம் நடக்கிறது.சென்னையிலிருந்து 35 கி.மீ., தொலைவில் கவரைப்பேட்டை அருகே உள்ளது சிறுவாபுரி(சின்னம்பேடு).

இங்கு அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், அருணகிரிநாதரின் திருப்புகழில் இடம்பெற்றுள்ளது. 'அண்டர்பதி குடியேற' என்று துவங்கும் திருப்புகழ் இத்தலத்திற்குரியது.வள்ளியம்மை முருகப்பெருமானை திருக்கரம் பற்றி, மணக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

தடைப்பட்ட திருமணங்கள் சரியாகி, மனம் நிறைந்த மங்கல வாழ்வு தரும் வள்ளி மணவாளபெருமானை தரிசிக்க, செவ்வாய்க்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், வழிபாட்டு குழுக்களை அமைத்து, முருகப்பெருமானுக்குஅபிஷேக ஆராதனைகள் செய்கின்றனர்.அந்த வகையில், சென்னையை சேர்ந்த அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினரின் இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, வரும் 14ம் தேதி, வள்ளி மணவாளபெருமானுக்கு கல்யாண மகோற்சவம் நடக்கிறது.அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு, பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 9 மணிக்கு வள்ளி மணவாள பெருமானுக்கு அபிஷேகமும், தொடர்ந்து காலை 10 மணிக்கு திருக்கல்யாணமும், 11 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடக்கிறது.இவ்விழாவையொட்டி, சிறப்பு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us