ADDED : ஜூலை 24, 2011 09:22 PM
கீழக்கரை : கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 36ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்க தலைவர் செய்யது அப்துல் காதர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். உதவி தலைவர் அகமது புகாரி ஒலிம்பிக் கொடியையும், இணை செயலாளர் ஜூனைத் பள்ளிக் கொடியையும் ஏற்றி வைத்தனர். பள்ளி மாணவர் தலைவர் நெய்னா முகம்மது உறுதி மொழி வாசித்தார். முன்னதாக பள்ளி முதல்வர் சகர்பானு வரவேற்றார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் ஹமீது அப்துல்காதர் மற்றும் சங்க நிர்வாகிகள் பரிசு வழங்கினர். துணை முதல்வர் சபுரா நன்றி கூறினார். இரண்டாம் நாள் பெண்களுக்கான விளையாட்டு போட்டி நூர்நிஸா தலைமையில் நடந்தது. நஜிமா தேசியக் கொடியையும், ஹைர்நிஸா பள்ளிக் கொடியையும் ஏற்றி வைத்தனர். பெற்றோர், முன்னாள் மாணவிகள் கலந்து கொண்டனர்.