/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அணைப்பட்டி சுற்றுலா தலம் ஆக்கப்படும் : மாவட்ட கவுன்சில் வேட்பாளர் பேச்சுஅணைப்பட்டி சுற்றுலா தலம் ஆக்கப்படும் : மாவட்ட கவுன்சில் வேட்பாளர் பேச்சு
அணைப்பட்டி சுற்றுலா தலம் ஆக்கப்படும் : மாவட்ட கவுன்சில் வேட்பாளர் பேச்சு
அணைப்பட்டி சுற்றுலா தலம் ஆக்கப்படும் : மாவட்ட கவுன்சில் வேட்பாளர் பேச்சு
அணைப்பட்டி சுற்றுலா தலம் ஆக்கப்படும் : மாவட்ட கவுன்சில் வேட்பாளர் பேச்சு
ADDED : அக் 08, 2011 10:50 PM
நிலக்கோட்டை : ''அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலை சுற்றுலா தலம் ஆக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,'' என, நிலக்கோட் டை ஒன்றிய அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் ஏ.சி.பாலசுப்பிரமணியன் பேசினார்.
பிரசாரத்தில் அவர் பேசியது: வைகை பெரியாறு கால்வாய் திட்டத்தில் ஆவாரம்பட்டி கண்மாய்க்கு நீர் செல்வதில் உள்ள இடையூறுகளை களைய, மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். குல்லிசெட்டிபட்டி வழி, வத்தலக்குண்டு-நிலக்கோட்டை வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க, அமைச்சர் விஸ்வநாதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலை சுற்றுலா தலமாக்க முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பூங்கா, நீரூற்றுகள் அமைக்க ஆவண செய்யப்படும். அணைப்பட்டி- ராமராஜபுரம் ரோடு தரம் உயர்த்தி அகலப்படுத்தவும், திண்டுக்கல், மதுரை, உசிலம்பட்டியில் இருந்து விளாம்பட்டிக்கு பஸ்கள் இயக்க முயற்சி எடுக்கப்படும். குண்டலப்பட்டி- குல்லிசெட்டிபட்டி ரோட்டில் தரைப்பாலங்கள், மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் ரோடுகள் முழுமையாக சீரமைக்கப்படும். கூட்டாத்து அய்யம்பாளையம் பழுதடைந்த பாலம் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் தெருவிளக்குகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும், என்றார்.


