/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வுஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : ஜூலை 17, 2011 01:57 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் மகாத்மா காந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் தரேஸ்அஹமது தெரிவித்ததாவது:பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை தோறும் மக்காச்சோளம், பருத்தி மற்றும் இதர வேளாண்பொருள்கள் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்து விவசாயிகள் பலனடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனால் இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளின் விளைபொருள்களுக்கு தரத்துக்கு ஏற்றவாறு விலை கிடைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள ஊரகக்கிடங்குகளில், இருப்பு வைத்து விளைபொருள்களுக்கு ஈடாக பணம் பெற்று பயன் பெறலாம்.பொருளீட்டுக்கடனாக விளைபொருள்களின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை கடனாக பெறலாம். விளைபொருள்களை அதிகபட்சம் 6 மாத காலம் வரை இருப்பு வைக்கலாம். இருப்பு வைக்கும் காலத்தில் முதல் 15 நாள்களுக்கு வட்டி ஏதும் வசூல் செய்யப்படுவதில்லை.
மீதமுள்ள காலத்துக்கு வருட வட்டியாக ஐந்து சதம் வசூல் செய்யப்படும். இருப்பு வைத்துள்ள காலத்தில் விளைபொருள்களின் விலை அதிகரிக்கும் போது, அதை விற்று கடனை செலுத்தலாம். பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் மக்காச்சோளம் கதிரடிக்கும் இயந்திரம் மற்றும் ரொடோவேட்டர் இயந்திரம் மிகக்குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது. எனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.