ADDED : ஜூலை 14, 2011 12:25 AM
திருச்சி: திருச்சி விமானநிலையம் அருகேயுள்ள விஸ்வகர்மா நகரைச் சேர்ந்தவர் லாசர்.
இவர் பெல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள்கள் இருவரும் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்கள் தினமும் கல்லூரிக்குச் செல்லும் போது, மூன்று வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்து கேலி செய்துள்ளனர். இதுகுறித்து மாணவிகள் இருவரும் தந்தை லாசரிடம் தெரிவித்துள்ளனர். அவர் விமான நிலைய போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில், விசாரணை நடத்திய போலீஸார், மாணவிகளை கேலி செய்தது சந்தோஷ் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராம்குமார் (23), கக்கன் காலனியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஊழியர் ராமச்சந்திரன், சீனிவாசன் ஆகிய மூவர் என்பது தெரியவந்தது. அவர்கள் மூவரையும் விமான நிலைய போலீஸார் கைது செய்தனர்.


