ADDED : ஜூலை 15, 2011 10:11 PM
வருஷநாடு : கடமலைக்குண்டை சேர்ந்தவர் தங்கராஜ்.
மனைவி சுருளியம்மாளுடன் (60), ஜங்கால்பட்டியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு, டூ வீலரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். டானா தோட்டம் அருகே வந்த போது ரோட்டில் கிடந்த மணலில் வாகனம் நிலை தடுமாறி விழுந்தது. இதில் இருவரும் காயமடைந்தனர். சுருளியம்மாள் தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.


