ADDED : ஆக 01, 2011 01:51 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டு கிராமத்தில் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி தலைமையில் ஆகஸ்ட் 17ம் தேதி, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.திருவள்ளூர் மாவட்ட சப்-கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வரும் 2ம் தேதி, பெருமாள்பட்டு கிராமத்திற்கு வருகை தந்து கலெக்டர் சார்பில் மனுக்களை பெறுகிறார்.
எனவே, கிராம மக்கள் அவரிடம் தங்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை நேரில் அளிக்கலாம்.
திருத்தணி வட்டம்: திருத்தணி வட்டம் வீரராகவபுரம் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும் 17ம் தேதி, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதையொட்டி, திருத்தணி தாசில்தார் வீரராகவபுரம் கிராமத்திற்கு வருகை தந்து, மாவட்ட வருவாய் அலுவலர் சார்பில் மனுக்களை பெறுகிறார். அவரிடம் கிராம மக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம்.இவ்வாறு திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.