தேக்கடி சாலையில் யானைக் கூட்டம் : போக்குவரத்து பாதிப்பு
தேக்கடி சாலையில் யானைக் கூட்டம் : போக்குவரத்து பாதிப்பு
தேக்கடி சாலையில் யானைக் கூட்டம் : போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 07, 2011 10:50 PM

கூடலூர்: குமுளியில் இருந்து தேக்கடி செல்லும் சாலையில், காட்டு யானைக் கூட்டம் வந்ததால், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள், இரண்டு மணி நேரம் நீண்ட கியூவில் நிறுத்தப்பட்டன.
குமுளியில் இருந்து தேக்கடி படகு நிறுத்தப்பகுதிக்குச் செல்ல, 4 கி.மீ., தூரத்தில் வனப்பகுதி பாதை உள்ளது. இப்பகுதியில், மான்கள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் மட்டுமே அதிகமாக இருக்கும். நேற்று பகல் வேளையில், தேக்கடி சாலையில் அமைந்துள்ள வனத்துறை அலுவலகம் முன், காட்டு யானைக்கூட்டம் திடீரென வந்தது. இதையடுத்து, அவ்வழியே வந்த சுற்றுலா வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. யானைக் கூட்டங்கள் சாலையைக் கடந்து செல்லும் வரை, சுற்றுலாப் பயணிகள் பொறுமையுடன் காத்திருந்தனர். இதனால், காலை 10 முதல் மதியம் 12 மணி வரை, அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


