/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மானிய விலையில் பெட்ரோல் : நலச்சங்கம் வேண்டுகோள்மானிய விலையில் பெட்ரோல் : நலச்சங்கம் வேண்டுகோள்
மானிய விலையில் பெட்ரோல் : நலச்சங்கம் வேண்டுகோள்
மானிய விலையில் பெட்ரோல் : நலச்சங்கம் வேண்டுகோள்
மானிய விலையில் பெட்ரோல் : நலச்சங்கம் வேண்டுகோள்
ADDED : ஆக 11, 2011 11:43 PM
பொள்ளாச்சி : 'ஆட்டோ டிரைவர்களுக்கு, மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும்' என, காங்., ஆட்டோ தொழிலாளர் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திரா தேசிய ஆட்டோ தொழிலாளர் நலச்சங்க கூட்டம், நகர காங்., அலுவலகத்தில் நடந்தது. சங்கத் தலைவராக செல்வராஜ், பொது செயலாளராக கிறிஸ்துராஜ், பொருளாளராக பாலமாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்ட ஆலோசகராக காங்., நகரத் தலைவராக ரவி, கவுரவ ஆலோசகர்களாக 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீனவர்களுக்கு வழங்குவதை போல், ஆட்டோ டிரைவர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும்; வீடில்லாத ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச நிலம் வழங்கி, வீடு கட்ட குறைந்த வட்டியில் கடனுதவி வழங்க வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க துணைத் தலைவர் ஞானமணிகண்டேஸ்வரன் நன்றி கூறினார்.


