Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அ.தி.மு.க., - தி.மு.க.,வைத் தவிர கவுன்சிலருக்குபோட்டியிட ஆள் இல்லை

அ.தி.மு.க., - தி.மு.க.,வைத் தவிர கவுன்சிலருக்குபோட்டியிட ஆள் இல்லை

அ.தி.மு.க., - தி.மு.க.,வைத் தவிர கவுன்சிலருக்குபோட்டியிட ஆள் இல்லை

அ.தி.மு.க., - தி.மு.க.,வைத் தவிர கவுன்சிலருக்குபோட்டியிட ஆள் இல்லை

ADDED : அக் 01, 2011 11:46 PM


Google News

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் பல கட்சிகளில் போட்டியிட ஆட்கள் கிடைக்கவில்லை.உள்ளாட்சித் தேர்தலில்தே.மு.தி.க., - கம்யூ., கட்சிகள் போட்டியிடுகின்றன.

பிற கட்சிகள் அனைத்தும் தனித்துபோட்டியிடுகின்றன. கூட்டணி இருந்தால் அனைத்து கட்சியிலும் சீட் பெற கடுமையான போட்டி நிலவும். தனித்து போட்டி என்பதால் போட்டியிட ஆட்கள் கிடைக்காமல் பல கட்சிகள் திணறின.நெல்லிக்குப்பம் நகர மன்ற தலைவருக்கு தி.மு.க., புகழேந்தி, அ.தி.மு.க., சுதாகர், தே.மு.தி.க., கவிதா, வி.சி., முல்லைவேந்தன், சுயேட்சை பழனிவேல், காங்., மீண்டசெல்வம், ம.தி.மு.க., பாலன், பகுஜன் சமாஜ் காமராஜ் போட்டியிடுகின்றனர்.தி.மு.க., - அ.தி.மு.க.,வில் மட்டும் மொத்தம் உள்ள 30 வார்டுகளிலும் கவுன்சிலர்களுக்கு போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு போட்டியிடும் தே.மு.தி.க.,வில் 10 , ம.தி.மு.க.,வில் 28, வி.சி., 16, காங்கிரசில் 14 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியில் ஒரு வார்டில் கூட யாரும் போட்டியிடவில்லை. பா.ம.க., தலைவர் மற்றும் 25 கவுன்சிலர்களுக்கும் போட்டியிடவில்லை.மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு சிட்டிங் தலைவர் ஜெயமூர்த்தி தி.மு.க.,விலும், அர்ச்சுனன் அ.தி.மு.க., விலும் போட்டியிடுகின்றனர். இந்த இரண்டு கட்சியில் மட்டுமே மொத்தமுள்ள 15 வார்டுகளிலும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் 14, தே.மு. தி.க., 2, ம.தி.மு.க., 12, பா.ம.க., 11 வார்டுகளில் போட்டியில்லை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us