ADDED : செப் 26, 2011 09:48 PM
சென்னை :மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர் மற்றும் மதுரை மாநகராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு, அ.தி.மு.க., சார்பில், புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:அ.தி.மு.க., ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர், மதுரை மாநகராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு, அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர்களுக்குப் பதிலாக, புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.
வேட்பாளர்கள் விவரம்:மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர் பதவிக்கு நாசர், பள்ளிகொண்டா பேரூராட்சித் தலைவர் பதவிக்கு சுப்பிரமணி, மதுரை மாநகராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு லட்சுமி (வார்டு 18), ஜெயக்குமார் (வார்டு 30), தங்கம் (57), கே.ஜெயக்குமார் (வார்டு 65), குமார் (வார்டு 72), சித்திரை ஜோதி (வார்டு 78), தர்வீஸ் மைதீன் (வார்டு 86) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


