/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இடிக்க தெரிந்தவர்களுக்கு கட்டுவதற்கு மனமில்லை : போலீசாருடன் பொதுமக்களும் அவதிக்குள்ளாகும் நிலைஇடிக்க தெரிந்தவர்களுக்கு கட்டுவதற்கு மனமில்லை : போலீசாருடன் பொதுமக்களும் அவதிக்குள்ளாகும் நிலை
இடிக்க தெரிந்தவர்களுக்கு கட்டுவதற்கு மனமில்லை : போலீசாருடன் பொதுமக்களும் அவதிக்குள்ளாகும் நிலை
இடிக்க தெரிந்தவர்களுக்கு கட்டுவதற்கு மனமில்லை : போலீசாருடன் பொதுமக்களும் அவதிக்குள்ளாகும் நிலை
இடிக்க தெரிந்தவர்களுக்கு கட்டுவதற்கு மனமில்லை : போலீசாருடன் பொதுமக்களும் அவதிக்குள்ளாகும் நிலை
வேடசந்தூர் : வேடசந்தூர் போலீஸ் ஸ்டேஷன் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு ஓராண்டாகிவிட்ட நிலையில், நிதி ஒதுக்கியும் பணிகள் துவங்கவில்லை.
இங்கு எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக லாக்கப் அறை இல்லை. இதனால் விசாரணைக்கு அழைத்து வருபவர்களை ஸ்டேஷனுக்கு வெளியில் உட்கார வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் குற்றவாளிகள் தப்புவதற்கு வாய்ப்புள்ளதால் போலீசார் நிம்மதியின்றி உள்ளனர். போலீஸ் ஸ்டேஷன் செல்லும் மக்கள் நிற்க கூட இடம் இல்லாமல் தவிக்கின்றனர். போலீசார் அமர்வதற்கும் போதிய இடவசதி இல்லை. விலைவாசி ஏறி வரும் நிலையில் சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி, இந்த ஆண்டில் கட்டடம் கட்ட போதுமானதாக இல்லை. பணியை துவக்குவதில் தாமதம் காரணமாக, தற்போது கூடுதல் நிதி தேவைப்படுகிறது. வேடசந்தூரில் பொது மக்கள் மற்றும் போலீசாரின் கவலையைப் போக்க, மாவட்ட போலீஸ் நிர்வாகம் கட்டட பணியை விரைவில் தொடங்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.