/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அத்தியாவசிய குழந்தை மருந்துகள் கருத்தரங்கம்அத்தியாவசிய குழந்தை மருந்துகள் கருத்தரங்கம்
அத்தியாவசிய குழந்தை மருந்துகள் கருத்தரங்கம்
அத்தியாவசிய குழந்தை மருந்துகள் கருத்தரங்கம்
அத்தியாவசிய குழந்தை மருந்துகள் கருத்தரங்கம்
ADDED : ஜூலை 24, 2011 12:05 AM
புதுச்சேரி : அத்தியாவசிய குழந்தை மருந்துகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
உலக சுகாதார மையம், இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி சார்பில் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அத்தியாவசிய குழந்தை மருந்துகள் என்ற தலைப்பில் ஓட்டல் அண்ணாமலையில் கருத்தரங்கம் நடந்தது.டாக்டர் சாந்தி வரவேற்றார். கருத்தரங்கை இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி இயக்குனர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். உலக சுகாதார மைய ஆலோசகர் டாக்டர் கீதாஞ்சலி மருத்துவனையில் குழந்தைகளுக்கு இருக்க வேண்டிய அத்தியவசிய மருந்து பொருட்கள் குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சென்னை எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லூரி டாக்டர் பிரேமா, சென்னை குழந்தைகள் மருத்துவமனை டாக்டர் ராமச்சந்திரன், இந்திரகாந்தி மருத்துவ கல்லூரி டாக்டர்கள் முரளி, மணிகண்டன், சச்சிதானந்தம், பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.