Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/தரம் உயர்த்திய அரசு மேல்நிலைப்பள்ளி : விழாவில் அரியலூர் கலெக்டர் அட்வைஸ்

தரம் உயர்த்திய அரசு மேல்நிலைப்பள்ளி : விழாவில் அரியலூர் கலெக்டர் அட்வைஸ்

தரம் உயர்த்திய அரசு மேல்நிலைப்பள்ளி : விழாவில் அரியலூர் கலெக்டர் அட்வைஸ்

தரம் உயர்த்திய அரசு மேல்நிலைப்பள்ளி : விழாவில் அரியலூர் கலெக்டர் அட்வைஸ்

ADDED : ஆக 27, 2011 11:38 PM


Google News

அரியலூர்: தரம் உயர்த்தப்பட்ட இரண்டு அரசு மேல்நிலை பள்ளிகளை, அரியலூர் மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ் நேற்று துவக்கி வைத்தார்.

நடப்பு 2011-2012ம் ஆண்டுக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தைகூடம், கோவிந்தபுரம் உள்ளிட்ட இரண்டு அரசு பள்ளிகளும் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டது. தரம் உயர்த்தப்பட்ட இலந்தைகூடம் அரசு மேல்நிலை பள்ளி துவக்கவிழா கலெக்டர் அனு ஜார்ஜ் தலைமையில், பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. சி.இ.ஓ., சுகுமார் தேவதாஸ் வரவேற்றார். அரியலூர் எம்.எல்.ஏ., துரை மணிவேல் முன்னிலை வகித்தார். புதிய அரசு மேல்நிலை பள்ளியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்த அரியலூர் கலெக்டர் அனு ஜார்ஜ் பேசியதாவது: கடந்த 1950ம் ஆண்டு துவக்கப்பட்ட இலந்தகூடம் அரசு பள்ளி, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு இந்த ஊரில் வசிக்கும் ஒட்டு மொத்த மக்களும் பாடுபட்டுள்ளனர். கடந்த காலத்தில் 10 கி.மீ.,க்கு ஒரு பள்ளி தான் இருக்கும். ஆனால், நமது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் பள்ளிகள் உள்ளன. குறிப்பாக, மகளிர் அனைவரும் ப்ளஸ் 2 வரை கட்டாய கல்வி பயில வேண்டும். கல்லூரி படிப்பையும் முடித்தால் தான் சமூகத்தில் மகளிர்க்கு நல்ல அந்தஸ்து கிடைக்கும். அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர் கல்வி பயில பல்வேறு வசதி வாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, மாணவ, மாணவியர் கல்வி பயில வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் யாரும் இல்லை என்ற நிலையை உருவாக்க, அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். கிராம கல்விக்குழு தலைவரும், இலந்தகூடம் பஞ்சாயத்து தலைவருமான குமரவேல், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலெக்ஷ்மி, ஒன்றிய கவுன்சிலர் தர்மலிங்கம், பெற்றோர் ஆசிரியர் குழு தலைவர் மதியழகன், பஞ்சாயத்து துணை தலைவர் சின்னதுரை, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுகுமாரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இலந்தகூடம் அரசு மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கம்மாள் நன்றி கூறினார்.

* அரியலூர் அருகே கோவிந்தபுரம் பள்ளி வளாகத்தில் நடந்த தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளி துவக்க விழாவுக்கு தலைமை வகித்த அரியலூர் மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ், குத்துவிளக்கு ஏற்றி, புதிய அரசு மேல்நிலை பள்ளியை துவக்கி வைத்தார். சி.இ.ஓ., சுகுமார் தேவதாஸ் வரவேற்றார். அரியலூர் எம்.எல்.ஏ., துரை மணிவேல் வரவேற்றார். விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலெக்ஷ்மி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வீரபாண்டியன், அரசு வக்கீல் ராம கோவிந்தராஜன், மதராஸ் சிமெண்ட்ஸ் துணை தலைவர் மாண்டியா யாதவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கோவிந்தபுரம் அரசு மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் பிச்சைபிள்ளை நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us