/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவுசந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
ADDED : ஜூலை 26, 2011 09:18 PM
உடுமலை : உடுமலை தினசரி சந்தையில், உள்ளூர் மற்றும் வெளியூர் வரத்து அதிகரித்துள்ளதால், கடந்த வாரத்தை விட இந்த வாரம் தக்காளி விலை சரிந்து கிலோ 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நல்ல விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உடுமலை மற்றும் சுற்று புற பகுதிகளில் சாராசரியாக 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த நாளில் மகசூல், சந்தைபடுத்துதல் எளிது, வானம் பார்த்த பூமிகளிலும் எளிய விவசாயம் உட்பட பல்வேறு காரணங்களினால், ஆண்டு முழுவதும், அனைத்து பருவங்களிலும் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கேரளா உட்பட வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு விற்பனைக்காக செல்கிறது. தற்போது, உடுமலை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தக்காளி அறுவடை தீவிரமடைந்துள்ளது. தற்போது சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை சரிவடைந்துள்ளது. இது குறித்து தினசரி காய்கறி வியாபாரிகள் கூறுகையில்,' சந்தைக்கு தக்காளி வரத்து கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகரித்துள்ளது. இதனால், ஒரு பெட்டி 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கிலோ 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரத்துக்கேற்றார் போல் வெளி மாநில வியாபாரிகளும் தக்காளி கொள்முதல் செய்ய அதிகளவு வருகின்றனர்,' என்றனர்.'தக்காளி சாகுபடிக்கு ஏக்கருக்கு, விதை, உழவு, உரம், மருந்து என 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், ஆண்டு தோறும் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலை உள்ளது. தக்காளி உற்பத்தி அதிகரிப்பு மற்றும் விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பதை தடுக்கும் வகையில் உடுமலை பகுதியில் பல ஆண்டுகால கோரிக்கையாக 'தக்காளி சாஸ்' தொழிற்சாலை அமைக்க வேண்டும்,' என விவசாயிகள் தெரிவித்தனர்.