Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மனைவியை கொன்ற கணவரை கைது செய்யக்கோரி மறியல்

மனைவியை கொன்ற கணவரை கைது செய்யக்கோரி மறியல்

மனைவியை கொன்ற கணவரை கைது செய்யக்கோரி மறியல்

மனைவியை கொன்ற கணவரை கைது செய்யக்கோரி மறியல்

ADDED : ஜூலை 26, 2011 01:21 AM


Google News

திண்டிவனம் : மனைவியை கொலை செய்த கணவன், அவரது கூட்டாளியை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தென்பசியார் காலனியை சேர்ந்தவர் பொய்யாதப்பன். இவரது மனைவி குள்ளம்மாள். இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை நீலாங்கரை அடுத்த கானத்தூரில் வசித்து வந்தனர். பொய்யாதப்பன் மகன் பரமசிவம்,33. இவர் தென்பசியார் காலனியை சேர்ந்த கண்ணப்பன் மகள் பிரேமா, 28, என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுவாதி (5), சித்தார்த் (3) என இரு குழந்தைகள் உள்ளனர்.



கடந்த சில ஆண்டுகளாக வரதட்சணை கேட்டு பிரேமாவை, பரமசிவம் கொடுமைப்படுத்தியுள்ளார். சில மாதங்களுக்கு முன் பரமசிவத்திற்கு சொந்தமான வீட்டுமனையை, அவரது நண்பர் வெங்கடேசன் மூலம் 7 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். அந்த பணத்தை கொடுக்காமல் வெங்கடேசன் தினமும் பரமசிவத்திற்கு மது வாங்கி கொடுத்துள்ளார். மனை விற்ற பணத்தை பிரேமா கேட்டதால் கணவருடன் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பரமசிவம், வெங்கடேசனுடன் சேர்ந்து கடந்த 22ம் தேதி இரவு பிரேமாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, உடலை வீட்டு குளியல் அறைக்குள் வைத்து பூட்டி, குழந்தைகளை வெளியே விட்டு, வீட்டை பூட்டிவிட்டு இருவரும் காரில் தப்பினர். இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிந்து பரமசிவம், வெங்கடேசனை தேடி வருகின்றனர்.



நேற்று காலை தென்பசியாருக்கு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பிரேமாவின் உடலை பார்த்து ஆவேசமடைந்த கிராம மக்கள், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மதியம் 1.45 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திண்டிவனம் தாசில்தார் தலைமலை, டி.எஸ்.பி., குப்புசாமி, இன்ஸ்பெக்டர் சரவணன் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மாலை 3 மணிக்கு பிரேமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us