ADDED : ஜூலை 16, 2011 02:34 AM
திண்டிவனம்:பட்டணம் கிராமத்தில் சிவ பார்வதி திருக்கல்யாண விழா
நடந்தது.திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தில் உள்ள பரமேஸ்வரன் கோவில்
கும்பாபிஷேக ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா நடந்தது.
மேல்மருவத்தூர்
ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிறுவன தலைவர் அன்பழகன் முன்னிலை
வகித்தார். முன்னதாக கோமாதா பூஜையும், சிவலிங்கத்திற்கு மகா
தீபாராதனையும் செய்து வைத்தார். தொடர்ந்து சிவ சக்தி திருக்கல்யாண வைபவம்
நடந்தது.தொடர்ந்து அகண்டத் திருவிளக்கு ஏற்றி வழிபாடு மற்றும் மகளிர்
மன்றத்தின் சார்பில் திருவிளக்கு பூஜையும் நடந்தது.


