/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உள்ளாட்சி தேர்தலில் சுய விருப்பு, வெறுப்பு இன்றி அரசு ஊழியர்கள் தேர்தலில் பணியாற்ற வேண்டும்உள்ளாட்சி தேர்தலில் சுய விருப்பு, வெறுப்பு இன்றி அரசு ஊழியர்கள் தேர்தலில் பணியாற்ற வேண்டும்
உள்ளாட்சி தேர்தலில் சுய விருப்பு, வெறுப்பு இன்றி அரசு ஊழியர்கள் தேர்தலில் பணியாற்ற வேண்டும்
உள்ளாட்சி தேர்தலில் சுய விருப்பு, வெறுப்பு இன்றி அரசு ஊழியர்கள் தேர்தலில் பணியாற்ற வேண்டும்
உள்ளாட்சி தேர்தலில் சுய விருப்பு, வெறுப்பு இன்றி அரசு ஊழியர்கள் தேர்தலில் பணியாற்ற வேண்டும்
ADDED : அக் 08, 2011 01:49 AM
தூத்துக்குடி : தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் சுய வெறுப்பு, விறுப்பு இல்லாமல் நேர்மையாகவும், எல்லோருக்கும் பொதுவாக பணியாற்ற வேண்டும்.
இல்லை என்றால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சியில் மாநகராட்சி தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலில் போஸ்டர்கள் ஒட்டக் கூடாது, டிஜிட்டல் பேனர்கள் வைக்க கூடாது, அலங்கார தாள் கட்சி கொடிகள் தோரணங்கள் கட்டக் கூடாது என்று உத்தரவு உள்ளது. இது போன்றவற்றை கண்காணிக்கும் வகையில் மாநகராட்சி தேர்தல் அதிகாரி தலைமையில் 8 உதவி தேர்தல் அதிகாரிகள் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து ரவுண்ட் சென்று போஸ்டர்கள் ஒட்டியிருந்தால் அதனை கிழித்து வருகின்றனர். வேறு ஏதாவது விதிமுறை மீறல்கள் நடந்திருக்கிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கான கூட்டம் மாநகராட்சி அலுவலக தேர்தல் பிரிவில் மாநகராட்சி தேர்தல் அதிகாரி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், உதவி தேர்தல் அதிகாரி இன்ஜினியர் ராஜகோபாலன் முன்னிலையில் நடந்தது. தேர்தல் பிரிவு கண்காணிப்பாளர் ஞானசேகரன் வரவேற்றார். உதவி தேர்தல் அதிகாரிகள் இளநிலை பொறியாளர் சரவணன், பிரின்ஸ், நகரமைப்பு அதிகாரி (பொ) ராமச்சந்திரன், நகரமைப்பு ஆய்வாளர்கள் காந்திமதி, ஆறுமுகம், சுகாதார அதிகாரி போஸ்கோராஜா, சுகாதார ஆய்வார் திருமால்சாமி, தேர்தல் தாசில்தார் குமார், தேர்தல் பிரிவு துரைமணி மற்றும் 15 மண்டல தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தை துவக்கி வைத்து மாநகராட்சி தேர்தல் அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது; மாநகராட்சி தேர்தலில் முதல் முறையாக எலக்டிரானிக் ஓட்டுப்பதிவு மூலம் (இ.வி.எம்) தேர்தல் நடக்கிறது. இதனால் இ.வி.எம் குறித்த பயிற்சியை நல்ல முறையில் எடுத்து கொள்ள வேண்டும். ஓட்டுப்பதிவு துவங்கும் முன்பாக நடக்கும் மாக் ஓட்டுப்பதிவினை சரியான நேரத்தில் துவக்கி முடிக்க வேண்டும். அப்படி செய்தால் அந்த நேரத்தில் இ.வி.எம்மில் பிரச்னை என்றாலும் முன் கூட்டியே அறிந்து மாற்று ஏற்பாட்டை உடனே செய்து கொள்ளலாம். இதனால் மாக் போல் குறித்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். இல்லை என்றால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்கிற நிலை ஏற்பட்டு பிரச்னைக்கு வழி ஏற்படுத்திவிடும். இவை எல்லாம் வராத அளவிற்கு முன் கூட்டியே எல்லா பணிகளையும் சரியான முறையில் சரியான நேரத்திற்கு பார்க்க வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் சுய விருப்பு,வெறுப்பு இல்லாமல் நேர்மையாக பணி செய்ய வேண்டும். ஏதாவது புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மண்டல அலுவலர்கள் என்றால் தேர்தல் பணியின் ஒட்டு மொத்த பொறுப்புகளையும் அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.


