/உள்ளூர் செய்திகள்/மதுரை/துப்பாக்கிச்சூடு: சிகிச்சை பெறுவோரிடம் விசாரணை :கலெக்டர், நீதிபதி நடத்தினர்துப்பாக்கிச்சூடு: சிகிச்சை பெறுவோரிடம் விசாரணை :கலெக்டர், நீதிபதி நடத்தினர்
துப்பாக்கிச்சூடு: சிகிச்சை பெறுவோரிடம் விசாரணை :கலெக்டர், நீதிபதி நடத்தினர்
துப்பாக்கிச்சூடு: சிகிச்சை பெறுவோரிடம் விசாரணை :கலெக்டர், நீதிபதி நடத்தினர்
துப்பாக்கிச்சூடு: சிகிச்சை பெறுவோரிடம் விசாரணை :கலெக்டர், நீதிபதி நடத்தினர்
ADDED : செப் 16, 2011 01:28 AM
மதுரை : பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தோரிடம் ஐகோர்ட் உத்தரவுப்படி, மதுரை கலெக்டர் சகாயம் மற்றும் மாவட்ட நீதிபதி ராஜசேகரன் நேரில் விசாரித்தனர்.
காயமடைந்தோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரித்து அறிக்கை வழங்கும்படி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதிகளுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 17 பேரிடம் நேற்று விசாரணை நடந்தது. கலெக்டர் சகாயம், முதன்மை மாவட்ட நீதிபதி(பொறுப்பு) ராஜசேகரன் நேற்று காலை 10.30 மணிக்கு பாதிக்கப்பட்டோரை சந்தித்தனர். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராமானுஜம், நிலைய மருத்துவ அதிகாரி பிரகதீஸ்வரன், தாசில்தார் ஞானகுணாளன் உடனிருந்தனர். வார்டுகள் 101, 99, 202 மற்றும் விரிவாக்க பிரிவில் சிகிச்சை பெற்ற ஒவ்வொருவரிடமும் காயங்கள், சிகிச்சை பற்றி விசாரித்தனர். டாக்டர்களும் விளக்கமளித்தனர். சிகிச்சை பெற்றவர்களில் பலர், வேடிக்கை பார்த்தபோது, தங்களை போலீசார் தாக்கி விட்டதாக தெரிவித்தனர். சிலர் தங்களுக்கு இன்னும் எக்ஸ்ரே கூட எடுக்கவில்லை என்று கூறியதும், அவர்களின் காயத்தை ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கும்படி உத்தரவிட்டனர். 'வெளியூரைச் சேர்ந்த நான் பரமக்குடி உறவினர் வீட்டுக்கு வந்தபோது, துப்பாக்கிக்குண்டு காலில் பாய்ந்தது. அதை ஆஸ்பத்திரியில் அகற்றிவிட்டனர்,'' என ஒருவர் கூறினார். கலெக்டரும், நீதிபதியும் சிகிச்சை விபரங்களை குறிப்பெடுத்துக் கொண்டனர். ராமநாதபுரம்: ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் பாம்பூர் சந்திரன், என். பெத்தானேந்தல் வெள்ளைச்சாமி, அம்மன்கோவில் செந்தில், எஸ்.காவனூர் இஸ்ரவேல், தனிக்கொடி, பரமக்குடி பாரதிநகர் பாண்டி ஆகியோரை, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி பாலசுந்திரகுமார், கலெக்டர் அருண்ராய் ஆகியோர் நேற்று சந்தித்தனர். 'சிகிச்சை முறையாக அளிக்கப் படுகிறதா, நல்ல உணவு வழங்கப்படுகிறதா, சிறப்பு சிகிச்சை தேவைப்படுகிறதா'' என நீதிபதி கேட்டார். நோயாளிகள், 'நன்கு சிகிச்சை தரப்படுகிறது. சிறப்பு சிகிச்சை தேவையில்லை' என தெரிவித்தனர். கலெக்டர் அருண்ராய் கூறியதாவது: மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி, நோயாளிகளிடம் காயங்கள் மற்றும் சிகிச்சை குறித்து விசாரித்தோம். இதன் அறிக்கை இன்று(செப்.,16) ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும், என்றார். அரசு மருத்துவமனை இணை இயக்குனர் பாலசந்திரன், கண்காணிப்பாளர் ஜமுனாராணி ஆகியோர் சிகிச்சை முறைகள் பற்றி நீதிபதியிடம் தெரிவித்தனர்.


