Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரைக்கு காவிரி கூட்டுக் குடிநீர் தி.மு.க., வேட்பாளர் அசோக்குமார்

மதுரைக்கு காவிரி கூட்டுக் குடிநீர் தி.மு.க., வேட்பாளர் அசோக்குமார்

மதுரைக்கு காவிரி கூட்டுக் குடிநீர் தி.மு.க., வேட்பாளர் அசோக்குமார்

மதுரைக்கு காவிரி கூட்டுக் குடிநீர் தி.மு.க., வேட்பாளர் அசோக்குமார்

ADDED : அக் 05, 2011 12:50 AM


Google News

மதுரை : ''மதுரை மாவட்ட ஊராட்சி 13வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த அரசை வலியுறுத்துவேன்,'' என, தி.மு.க., வேட்பாளர் பொறியாளர் பி.அசோக்குமார் உறுதி கூறினார்.

தி.மு.க., கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலாளராக இவர், கடந்த உள்ளாட்சி தேர்தலில் இதே வார்டில் வென்று மாவட்ட ஊராட்சி தலைவரானார். காளமேகப்பெருமாள் கோயில் அறங்காவலராக இருந்தார்.



பி.அசோக்குமார் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டுகளில் ஊராட்சிகளில் கப்பி, தார், சிமென்ட் ரோடு அமைத்துள்ளேன். நூலகங்கள், நரிக்குறவர்காலனியில் ரேஷன்கடை மற்றும் ஊட்டச் சத்து மையம், நாடகமேடை, சுடுகாட்டு கூரை, குடிநீர், கண்மாய்களில் மதகுகள், பாதாள சாக்கடை, பயணிகள் நிழற்கூடை என எல்லா கிராமங்களிலும் வசதிகளை செய்துள்ளேன். என் பணிகள் நடக்காத கிராமங்கள் இல்லை. கூடுதல் பாலிடெக்னிக், சிப்பெட் கல்லூரியை மத்தியமைச்சர் அழகிரி கொண்டு வர உறுதுணையாக இருந்தேன். மேலூரில் மத்தியமைச்சர் அலுவலக பொறுப்பாளராக உள்ளேன். உறங்கான்பட்டி மந்தைகருப்பணசாமி கோயில், கொட்டாம்பட்டி பகவதியம்மன் கோயில் பிரச்னைகள் தீர்க்க முயற்சித்தேன். பத்து பள்ளிகளில் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளை அமைக்க என் சொந்த பணம் செலவிட்டேன். வெற்றி பெற்றவுடன், ரூ.700 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசை வலியுறுத்துவேன். அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கிடைக்க செய்வேன், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us