/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/குமரியில் உலக சுற்றுலா தின கொண்டாட்டம்குமரியில் உலக சுற்றுலா தின கொண்டாட்டம்
குமரியில் உலக சுற்றுலா தின கொண்டாட்டம்
குமரியில் உலக சுற்றுலா தின கொண்டாட்டம்
குமரியில் உலக சுற்றுலா தின கொண்டாட்டம்
ADDED : செப் 28, 2011 12:42 AM
கன்னியாகுமரி : உலக சுற்றுலா தினமான நேற்று கன்னியாகுமரி பூம்புகார் படகுதுறையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சங்குமாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆண்டு தோறும் செப்.27ம் தேதி உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்பட்டது.உலக சுற்றுலா தினமான நேற்று குமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் காலை 10 மணியளவில் பூம்புகார் படகுதுறையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி சங்குமாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சுற்றுலா விளக்க கையேடு வழங்கப்பட்டது.மாவட்ட சுற்றுலா அதிகாரி முரளிதேவி சுற்றுலா பயணிகளை வரவேற்றார். நிகழ்ச்சியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுற்றுலா பயணி பேட்டி:இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர்கள் ஜான்ஸிம்ஸ்ன்,ஸாசர் ஆகியோர் கூறியதாவது:நாங்கள் திருவனந்தபுரத்தில் நடைபெறும் மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவிற்கு வந்துள்ளோம்.கன்னியாகுமரி எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.இங்கு மிகவும் அமைதியாக உள்ளது.தற்போதுள்ள பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.