/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மனு எழுதும் மகளிரின் விண்ணப்பம் குறைதீர்க்குமா தாலுகா அலுவலகம்?மனு எழுதும் மகளிரின் விண்ணப்பம் குறைதீர்க்குமா தாலுகா அலுவலகம்?
மனு எழுதும் மகளிரின் விண்ணப்பம் குறைதீர்க்குமா தாலுகா அலுவலகம்?
மனு எழுதும் மகளிரின் விண்ணப்பம் குறைதீர்க்குமா தாலுகா அலுவலகம்?
மனு எழுதும் மகளிரின் விண்ணப்பம் குறைதீர்க்குமா தாலுகா அலுவலகம்?
ADDED : செப் 06, 2011 01:31 AM
ஈரோடு:ஈரோடு தாலுகா அலுவலகத்தில், மனு எழுதுவதற்காக மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 3.5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தில், அடிப்படை வசதிகள் இல்லாததால், பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
பல்வேறு சான்றிதழ்கள், பட்டா மாறுதல், ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாறுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் கோரி, நாள்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஈரோடு தாலுகா அலுவகம் வருகின்றனர். இவர்களுக்கு உரிய விண்ணப்பங்கள், கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப் விற்பனை செய்யும் பணியை 30 ஆண்டுகளுக்கு மேலாக, வாழ்வுரிமைக்காக மனு எழுதுவோர் சங்கத்தினர் செய்துவந்தனர். புரோக்கர்கள் சிலர், சான்றிதழ் பெற்றுத்தருவதாக கூறி, மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்ததாக புகார் வந்தது. பொதுமக்களுக்கு நியாயமான கட்டணத்தில் மனு எழுதி தர, மகளிர் குழு பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஈரோடு, 'செம்மொழி' மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் ஒன்றரை ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மனுக்களை எழுதி வழங்கி வருகின்றனர். மரத்தடியில் அமர்ந்து மனு எழுதி வந்த இவர்களுக்கு, தாலுகா அலுவலக வளாகத்தில், 3.5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டித்தரப்பட்டது. ஜூலை மாதம் இக்கட்டிடம் திறக்கப்பட்டது. திறப்பு விழாவின் போது, ஆர்.டி.ஓ., கூறுகையில், 'இக்கட்டிடத்தில், பொதுமக்கள் அமர இருக்கைகள், கழிப்பிட வசதி செய்து தரப்படும்' என்று கூறியிருந்தார். மனு எழுதும் கட்டித்தில் மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். இவர்களில் மாற்றுத் திறனாளி பெண்களும் இருக்கின்றனர். பொது மக்களுக்கு உட்கார சிமென்ட் இருக்கை உள்ளது. ஆனால், மனு எழுதும் சுயஉதவிக்குழு பெண்களுக்கு நாற்காலி, மேஜை, விண்ணப்பங்கள் வைக்க அலமாரி வசதி இல்லை. சிறிய அளவிலான இந்த அறைக்குள் அதிகப்படியான பொதுமக்கள் வந்து செல்வால், காற்றின்றி அவதியுறுகின்றனர். மின் இணைப்பு இல்லாததால், மின்விசிறி, விளக்கு இல்லை.மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சுயமாக ஜெராக்ஸ் மிஷின் வாங்க வங்கியில் கடன் கேட்டு, வங்கியும் மூன்று மாதங்களுக்கு முன் கடன் வழங்கிவிட்டது. ஆனால், மின் இணைப்பு இல்லாததால், ஜெராக்ஸ் மிஷின் வாங்காமல், வாங்கிய கடனுக்கு, வங்கிக்கு வட்டி கட்டி வருகின்றனர். கழிப்பிட வசதி இல்லாததால், பெண்கள் அவதிக்கு ஆளாகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, மின்வசதி மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.


