ADDED : அக் 05, 2011 11:03 PM

சிவகங்கை நகராட்சி வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சுரேஷ், பிரசாரத்தின் போது, 'என்னால் முடிந்த வாக்குறுதிகளை மட்டுமே உங்களிடம் சொல்வேன்.
சொன்ன வாக்குறுதியை எனது தலைவர் விஜயகாந்த் பாணியில் நிறைவேற்றுவேன் எனக் கூறி வாக்குறுதிகளை நோட்டீசாக வினியோகித்தார். அதில், நான் வெற்றி பெற்றால் சீரான முறையில் மின்சாரம் கிடைத்திட முயற்சி மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முயற்சி செய்தே சரியா மின்சாரம் வழங்க முடியல. கவுன்சிலருக்கும் மின்சாரத்திற்கும் என்ன தொடர்பு என்றார் பொதுஜனம் ஒருவர்.


