Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பழைய தகவலுடன் பள்ளிக்கல்வி இணையதளம்:மாநில அளவில் கல்வி அதிகாரிகள் குழப்பம்

பழைய தகவலுடன் பள்ளிக்கல்வி இணையதளம்:மாநில அளவில் கல்வி அதிகாரிகள் குழப்பம்

பழைய தகவலுடன் பள்ளிக்கல்வி இணையதளம்:மாநில அளவில் கல்வி அதிகாரிகள் குழப்பம்

பழைய தகவலுடன் பள்ளிக்கல்வி இணையதளம்:மாநில அளவில் கல்வி அதிகாரிகள் குழப்பம்

ADDED : அக் 02, 2011 12:06 AM


Google News

ஈரோடு:பள்ளி கல்வித்துறையின் இணையதளம் புதுப்பிக்கப்படாமல், ஆட்சி மாறிய பிறகும் பழைய தகவல்களுடனேயே உள்ளது.தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாநிலம் முழுவதும், 68 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., அரசு பதவியேற்று, நான்கு மாதங்கள் முடிந்தும், கல்வித்துறையில் அதிகாரிகள் யாரும் இடமாற்றம் செய்யப்படாமல் இருந்தனர். சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பாக, இந்நடவடிக்கை தள்ளிப்போனது.செப்., 21ம் தேதி இணை இயக்குனர்கள், 17 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்து, பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா உத்தரவிட்டிருந்தார்.



இவர்களை தொடர்ந்து, அதற்கு மறுநாளே எட்டு இயக்குனர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.பள்ளிக் கல்வித் துறை சார்பில், தீதீதீ.ணீச்டூடூடிடுச்டூதிடி.டிண என்ற இணையதளம் உள்ளது. இயக்குனரகம், ரிப்போர்ட், துறையின் புள்ளிவிவரங்கள், விண்ணப்பங்கள், அரசாணை உள்ளிட்ட அனைத்து விவரங்களும், இந்த இணையதளத்தில், அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன; தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள், இந்த விவரங்களின் அடிப்படையில் தான், அரசின் நடவடிக்கை மற்றும் ஆணைகளை அறிந்து கொள்கின்றனர்.

பள்ளி கல்வித்துறை இயக்குனரகம், இந்த இணையதளத்தில் விவரங்களை முறையாக பதிவு செய்வதில்லை. தற்போது, இந்த இணையதளத்தில், 2008-09ம் கல்வியாண்டுக்கான பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் பிற விவரங்களே தரப்பட்டுள்ளன.



இயக்குனர் முதல் பிற அதிகாரிகள் பெயர்களும் புதுப்பிக்கப்படாமல், பழைய விவரங்களே உள்ளன.பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக மணி பணிபுரிகிறார். ஆனால், இந்த இணையதளத்தில் முன்னாள் இயக்குனர் வசுந்தராதேவியின் பெயரே இன்னும் உள்ளது.இணையதளத்தில் விவரங்களை சேர்க்கவும், மாற்றவும் பள்ளி கல்வித்துறையின் இயக்குனரகத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும், 2009ல் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் என்பதால், மாநிலம் முழுவதும் உள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.கல்வித்துறை சம்பந்தமான எந்தவொரு விவரமும் கிடைக்கப் பெறாமல், கல்வித்துறை அதிகாரிகள் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us