/உள்ளூர் செய்திகள்/தேனி/மதுரை ஆகாஸ் கேபிள் நிறுவனம் மீது புகார்மதுரை ஆகாஸ் கேபிள் நிறுவனம் மீது புகார்
மதுரை ஆகாஸ் கேபிள் நிறுவனம் மீது புகார்
மதுரை ஆகாஸ் கேபிள் நிறுவனம் மீது புகார்
மதுரை ஆகாஸ் கேபிள் நிறுவனம் மீது புகார்
ADDED : ஜூலை 27, 2011 10:38 PM
தேனி : மதுரை ஆகாஸ் கேபிள் நிறுவன ஏஜன்ட்கள் தங்களை தாக்க முயன்றதாக தமிழக கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் பொதுநல சங்க தேனி மாவட்ட தலைவர் தமிழன் எஸ்.பி., பிரவீன்குமார் அபினவுவிடம் புகார் செய்துள்ளார்.
மனுவில் கூறியுள்ளதாவது: தேனி மாவட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தேனியில் தனியார் ஓட்டலில் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருந்தோம். அப்போது மதுரை ஆகாஸ் கேபிள் ஏஜன்டாக வேலை பார்க்கும், திருமுருகன் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 5 பேர் கையில் கத்தி, கம்பு, ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து எங்களை தாக்க முயன்றனர். நாங்கள் ஒரு அறைக்குள் ஒழிந்து கொண்டு உயிர் தப்பினோம். இச்சம்பவம் மதுரை ஆகாஸ் கேபிள் உரிமையாளர் சரவணன் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளது,' இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. தேனி எஸ்.பி., கூறுகையில்,'புகார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. யாரும் கைதாகவில்லை,'என்றார்.