ADDED : ஆக 30, 2011 02:30 AM
பழநி:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சி சார்பில் பழநி பகுதியில் 20 சிலைகள் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக கன்னியாகுமரி மாவட்டம், தூவாலையில் இருந்து, லாரி மூலம் நேற்று பழநிக்கு சிலைகள் கொண்டு வரப்பட்டன. இவை காகிதக்கூழால் தயாரானவை. அதிகபட்சமாக ஒன்பதரை அடி முதல் மூன்றரை அடி வரையிலான உயரங்களில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.மாவட்ட அமைப்பாளர் சிவக்குமார் கூறுகையில், 'செப்., 1ல் சிறப்பு பூஜைகளுடன், பழநி, நெய்க்காரபட்டி, கொமரலிங்கம் உள்ளிட்ட இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். இரண்டு நாட்கள் தொடர் பூஜைக்குப் பின், செப்.,3 ல் அடிவாரம் பாதவிநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படும்,' என்றார்.


