ADDED : செப் 24, 2011 10:05 PM
சிவகாசி : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களை மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சி, மாவட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, பதக்கம், கோட்டை, கேரம்போர்டு, கம்ப்யூட்டர், மேசை மின்விசிறி, சீத்தாப்பழம், பஸ், இருகூர் வாள், கோப்பையுடன் தட்டு, பளுதூக்குதல், சட்டை, சட்டைமாட்டி, ரயில் தண்டவாளம், பற்றுக்குறடு, பெட்டி, லென்ஸ் கண்ணாடி, மட்டை, இரட்டை நாதஸ்வரம், கைபம்பு, பெல்ட் , பேனா, சாய்வு மேஜை, கைக்கடிகாரம், இங்க் பாட்டில், வளையல்கள், விளக்கு, பூந்தொட்டி, பெஞ்ச், புத்தகம், டிஷ் ஆன்டனா உள்ளிட்ட 30 சின்னங்களை தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்துள்ளது. இது போல் கவுன்சிலர், ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சைகளுக்கு இசைக்கருவி, அடையாளக்குறி, வைரம், உலக உருண்டை, முகம்பார்க்கும் கண்ணாடி, அசைந்தாடும் நாற்காலி, பாட்டில், ஊஞ்சல், ரோடு உருளை, பூப்பந்து மட்டை, திருகாணி, கோட், அலமாரி, முள்கரண்டி, ஹாக்கி மட்டையுடன் பந்து, ஹேண்ட்பேக், மேஜை விளக்கு, ஊதும் இசைக்கருவி, கைப்பை, தீப்பெட்டி, டை , தென்னைமரம், அரிக்கேன் விளக்கு, கரண்டி, தண்ணீர்க் குழாய், கை தடி உள்ளிட்ட சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


