/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அனுமதியின்றி வாகனங்களில்பிரச்சாரம்: 5 டிரைவர்கள் கைதுஅனுமதியின்றி வாகனங்களில்பிரச்சாரம்: 5 டிரைவர்கள் கைது
அனுமதியின்றி வாகனங்களில்பிரச்சாரம்: 5 டிரைவர்கள் கைது
அனுமதியின்றி வாகனங்களில்பிரச்சாரம்: 5 டிரைவர்கள் கைது
அனுமதியின்றி வாகனங்களில்பிரச்சாரம்: 5 டிரைவர்கள் கைது
ADDED : அக் 07, 2011 10:52 PM
சிவகங்கை : சிவகங்கையில் பிரச்சாரத்திற்காக அனுமதியின்றி வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்சென்றதாக 5 வாகன டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் 4 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, காங்., வட்டார தலைவர் சோனை போட்டியிடுகிறார்.
இவருக்கு ஆதரவாக அக்கட்சியினர் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பிரவலூரில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 5 டாடா ஏஸ் வாகனங்களில் கட்சியினரை அழைத்து சென்றனர்.இதற்கு போலீசில் அனுமதி பெறவில்லை.அப்பகுதியில் ரோந்து சென்ற டி.எஸ்.பி., ஸ்டாலின் வாகனங்களை சோதனை செய்த போது அனுமதி பெறவில்லை என விசாரணையில் தெரிந்தது.இதையடுத்து, சிவகங்கை பி.டி.ஓ., கிருஷ்ணமூர்த்தி புகாரின் படி,மதகுபட்டி போலீசார் டாடா ஏஸ் டிரைவர்கள் மணிகண்டன், 28. வெள்ளைச்சாமி ,27. சபரிராமன், சதீஸ்கண்ணன், 27. பிரபாகரன், 21-யை கைது செய்து,வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


