/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஊழலை எதிர்த்து செப். 2 ல் போராட்டம்ஊழலை எதிர்த்து செப். 2 ல் போராட்டம்
ஊழலை எதிர்த்து செப். 2 ல் போராட்டம்
ஊழலை எதிர்த்து செப். 2 ல் போராட்டம்
ஊழலை எதிர்த்து செப். 2 ல் போராட்டம்
ADDED : ஆக 30, 2011 12:24 AM
பரமக்குடி:ஊழலை எதிர்த்து செப்., 2 ல், தமிழகத்தில் போராட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்துள்ளது.
தென்மண்டல ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர்களின் சந்திப்பு கூட்டம் பரமக்குடியில் நடந்தது. மாநில அமைப்பாளர் கேசவ விநாயகம்ஜி பேசியதாவது: ஊழலை ஆர்.எஸ்.எஸ். கடுமையாக எதிர்த்து வருகிறது. அது தான் நமது லட்சியம். லோக்பால் தீர்மானம் கூட, ஒரு கண் துடைப்பாகவே இருக்கும். ஊழல் செய்திருக்கக்கூடிய, ஊழல் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து, ஊழலை தடுக்க சட்டம் கொண்டு வருவதாக கூறுவது பகல் வேஷம். ஊழலை எதிர்த்து செப்., 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் விளக்க கூட்டங்கள், போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சார்பு அமைப்புகள் நடத்த உள்ளது, என்றார். மாவட்ட செயலாளர் பி.கே.நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


