அதிக கடன் சுமை நாடுகள்:இந்தியாவுக்கு 5வது இடம்
அதிக கடன் சுமை நாடுகள்:இந்தியாவுக்கு 5வது இடம்
அதிக கடன் சுமை நாடுகள்:இந்தியாவுக்கு 5வது இடம்
UPDATED : ஆக 13, 2011 12:51 AM
ADDED : ஆக 12, 2011 11:28 PM

புதுடில்லி: 'அதிக கடன் சுமையுள்ள வளரும் நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது' என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.லோக்சபாவில் நேற்று அவர் கூறியதாவது:அதிகமாக வெளிநாட்டு கடன் சுமையுள்ள, 20 வளரும் நாடுகள் குறித்த பட்டியலை, உலக வங்கி வெளியிட்டது.
இதன்படி, 2009ல், அதிக கடன் சுமையுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இருந்தாலும், இந்த கடன் சுமை, சமாளிக்கக் கூடியதே. இது பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்தப் பட்டியலில், சீனா, ரஷ்யா, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகள், முதல் நான்கு இடத்தைப் பிடித்துள்ளன என்றார்.


