UPDATED : ஆக 17, 2011 07:49 PM
ADDED : ஆக 17, 2011 06:56 PM
புதுடில்லி: வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
அவருக்கு ஆதரவாக இந்தியா கேட், ஜந்தர் மந்தர் பகுதி, திகார் சிறை, ராம்லீலா மைதானத்தில் பல்லாயிரகணக்கான மக்கள் கூடியுள்ளனர். அங்கு அரசு, ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். அன்னாவுக்கு ஆதரவாக நடக்கும் பேரணியிலும் லட்சகணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அன்னாவுக்கு ஆதரவாக இந்தியாவின் பல நகரங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டது. மேலும் பல நகரங்களில் ஆதரவாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.


