Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பெருந்துறை யூனியனில் 9 ஓட்டுச்சாவடி பதட்டம்

பெருந்துறை யூனியனில் 9 ஓட்டுச்சாவடி பதட்டம்

பெருந்துறை யூனியனில் 9 ஓட்டுச்சாவடி பதட்டம்

பெருந்துறை யூனியனில் 9 ஓட்டுச்சாவடி பதட்டம்

ADDED : செப் 30, 2011 01:53 AM


Google News
பெருந்துறை: பெருந்துறை யூனியனில் ஒன்பது ஓட்டுசாவடிகள் பதட்டமானவை என கண்டறிப்பட்டுள்ளது.கள்ளியம்புதூர்: பெருந்துறை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாமி, கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் ராஜலிங்கம் ஆகியோர் யூனியன் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதால், இங்குள்ள ஓட்டுச்சாவடி பதட்டமானதாக கருதப்படுகிறது.பெரியவேட்டுவபாளையம்: இங்கு 2011 சட்டசபை தேர்தலின் போது, போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் லேசாக தடியடி நடத்தினர். அங்குள்ள ஓட்டுச்சாவடியில் மீண்டும் பதட்டம் ஏற்படலாம் என்று கருதி, போலீஸார் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.சேர்வக்காரன்பாளையம்: மூங்கில்பாளையம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் , பெரியப்பன் என்ற அருணாசலம் போட்டியிடுகிறார். தி.மு.க.சார்பில் அவர் தம்பி சின்னப்பன் என்கிற முத்துசாமி போட்டியிடுகிறார்.

இருவருக்கு இடையே குடும்ப தகராறு உள்ளது. அவர்களின் சொந்த ஊரான சேர்வகாரன்பாளையம் ஓட்டுச்சாவடியில் பதட்டம் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.கீழேரிபாளையம்: இங்கு இரண்டு ஜாதிக்காரர்கள் சம பங்கு பலத்தில் இருப்பதால், போலீஸாரின் கவனம் திரும்பியுள்ளது.கருமாண்டிசெல்லிபாளையம்: இங்கு தலைவர் பதவிக்கும், வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கும் போட்டியிடுபவர்கள், பணம் மற்றும் அரசியலில் பலம் வாய்ந்தவர்கள் என்பதால், போலீஸார் கூடுதல கவனம் செலுத்துகின்றனர்.

இவை ஐந்து கிராமங்களுக்கு உட்பட்ட ஒன்பது ஓட்டுச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கணிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us