/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பட அமைச்சரிடம் மனுவிழுப்புரம் அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பட அமைச்சரிடம் மனு
விழுப்புரம் அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பட அமைச்சரிடம் மனு
விழுப்புரம் அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பட அமைச்சரிடம் மனு
விழுப்புரம் அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பட அமைச்சரிடம் மனு
ADDED : ஆக 09, 2011 02:44 AM
விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இது குறித்து விழுப்புரம் நகர அ.தி.மு.க., இளை ஞரணி துணை செயலா ளர் கார்த்திக் உள்ளிட்டோர் அமைச்சர் சண்முகத்தை சந்தித்து அளித்த மனு:விழுப்புரத்தில் நீண்ட காலம் இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனை கடந்த தி.மு.க., ஆட்சியில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
இதனால் விழுப்புரம் பகுதி மக்கள் அவசர சிகிச்சை பெற அவதிப்பட்டு வருகின்றனர். பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடித்தும், விபத்தில் படுகாயமடைந்து வருவோர் விழுப்புரம் நகரில் அரசு மருத்துவமனை இயங்காததால் உடனடி முதலுதவி சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது.விழுப்புரம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் விழுப்புரத்தில் அரசு மருத்துவமனை இயங்கிட அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


