ADDED : அக் 13, 2011 05:37 AM
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது
செய்து அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரொக்கப்பணம் ரூ.13 ஆயிரத்து
550யையும் பறிமுதல் செய்தனர்.இது குறித்து போலீஸ்தரப்பில்
கூறப்படுவதாவது,தூத்துக்குடி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய கும்பல்களை
பிடிப்பதற்கு எஸ்.பி., நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவின்
பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் பணம் வைத்து
சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் தூத்துக்குடி
எட்டயபுரம் ரோடு தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் பகுதியில் பணம் வைத்து
சூதாடுவதாக மத்திய பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்
மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் தனஸ்லாஸ்பாண்டியன் அக்கும்பலை பிடித்தார். இதில்
தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்த கண்ணன் மகன் ராம்தாஸ் (35), கேவிகே.,
நகரைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் மனோகரன் (32), அதே பகுதியைச் சேர்ந்த
பால்மணி மகள் ஆனந் (30), முனியசாமி (45), புதுக்கோட்டை ராஜ்குமார் மகன்
மிக்கேல் (31), மில்லர்புரத்தைச் சேர்ந்த முருகன் (40), பெருமாள் மகன்
காளிதாஸ் (36)ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்த
சீட்டு கட்டுகள், ரூ.13ஆயிரத்து 550யும் பறிமுதல் செய்தனர்.


