ஹசாரேவை ஆதரித்து பிரதமருக்கு ரத்தத்திலான கடிதம்
ஹசாரேவை ஆதரித்து பிரதமருக்கு ரத்தத்திலான கடிதம்
ஹசாரேவை ஆதரித்து பிரதமருக்கு ரத்தத்திலான கடிதம்
ADDED : ஆக 23, 2011 07:35 PM
ஆமதாபாத் : வலுவான ஜன் லோக்பால் அமைய வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற உள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினரை ஆதரித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அகில இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பினர், ரத்தத்தினால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தினை அனுப்பியுள்ளனர்.
குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் இதர கல்லூரிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவர்களின் ரத்தத்தின் மூலம் கடிதம் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பாவிக் ராஜா தெரிவித்தார்.


