ADDED : ஜூலை 28, 2011 09:44 PM
சென்னை: சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி சக்சேனாவின் ஜாமின் மனு மீதான விசாரணையை நாளைக்கு, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளி வைத்துள்ளது.
சினிமா தயாரிப்பாளர் ராஜா என்பவர், 'வல்லக்கோட்டை' படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக, சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி சக்சேனாவுக்கு எதிராக, விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இவ்வழக்கில் சக்சேனா, ஐயப்பன் கைது செய்யப்பட்டனர். இருவரும் ஜாமின் கோரி, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். நீதிபதி தேவதாஸ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு போலீஸ் தரப்பில் விளக்கம் பெற, நகர அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு நீதிபதி தேவதாஸ் தள்ளி வைத்தார்.


