/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/2015 க்குள் 596 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்2015 க்குள் 596 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
2015 க்குள் 596 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
2015 க்குள் 596 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
2015 க்குள் 596 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
ADDED : ஜூலை 14, 2011 09:25 PM
விருதுநகர் : ''இந்தியாவில் 2015 ம் ஆண்டுக்குள் 596 மாவட்டங்களில் உள்ள நகரங்களில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டமான சைல்டு லைன் திட்டம் செயல்படுத்தப்படும்,'' விருதுநகர் கலெக்டர் பாலாஜி தெரிவித்தார்.
விருதுநகரில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டமான 'சைல்டு லைன்' திட்டத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: குழந்தைகள் பாதுகாப்பு திட்டமானது 24 மணி நேரமும் செயல்படும்.
இத்திட்டம் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கான துறையின் நிதியுடன் மாநில, மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு இல்லாத குழந்தைகளுக்கு பாதுகாப்பும், அரவணைப்பும் வழங்கப்படும். இக்கட்டான சூழ்நிலையில் உள்ள குழந்தைகள் பற்றி, குழந்தைகளோ, பெரியவர்களோ 1098 என்ற இலவச தொலை பேசியில் அழைத்தால் சைல்டு லைன் தேவையான பாதுகாப்புக்கு வழி காட்டும். இந்தியாவில் 25 மாநிலங்களில் 83 நகரங்களில் இந்த அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2015 ம் ஆண்டுக்குள் 596 மாவட்டங்களில் உள்ள நகரங்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது, என்றார்.


