/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 14, 2011 11:34 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டி மஹாசக்தி மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி, கடந்த 10ம் தேதி கணபதி ஹோமம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
நாள் தோறும் மாலையில் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது. கடந்த புதன் மாலை மூன்றாம் கால யாக பூஜையும், பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தன சமர்பணம், பூர்ணாஹீதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை அவப்ருத யாக பூஜை, யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடந்தது. 9 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 10 மணிக்கு கருமாரி நிலையம்மன் கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தர்மபுரி கோட்டை கோவில் முதன்மை சிவாச்சாரியார் செல்வமுத்துகுமாரசாமி குழுவினர், கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து, மஹா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. கிட்டம்பட்டி, அம்மன் நகர் மற்றும் கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திம்மராயன், கோவிந்தன், மாதன், குள்ளன், லட்சுமணன் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தம்மாள் அங்கப்பன் மற்றும் கிட்டம்பட்டி ஊர் பொதுமக்கள் செய்தனர்.


