/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பல்லடத்தில் மினி பஸ்கள் ஒரு மணி நேரம் "ஸ்டிரைக்'பல்லடத்தில் மினி பஸ்கள் ஒரு மணி நேரம் "ஸ்டிரைக்'
பல்லடத்தில் மினி பஸ்கள் ஒரு மணி நேரம் "ஸ்டிரைக்'
பல்லடத்தில் மினி பஸ்கள் ஒரு மணி நேரம் "ஸ்டிரைக்'
பல்லடத்தில் மினி பஸ்கள் ஒரு மணி நேரம் "ஸ்டிரைக்'
ADDED : ஜூலை 15, 2011 12:59 AM
பல்லடம் : மினி பஸ் பஸ் கண்ணாடியை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி, பல்லடத்தில் நேற்று மினி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஒரு மணி நேரம் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
பல்லடம் பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று முன்தினம் இரவு 7.50 மணிக்கு மினி பஸ் நடுவேலம்பாளையம் நோக்கி சென்றது. டிரைவர் அருள் பஸ்சை ஓட்டினார். கண்டக்டராக சேகர் பணிபுரிந்தார். நடுவேலம்பாளையம் அருகே சென்ற போது, பஸ்சில் பயணம் செய்த நடுவேலம்பாளையத்தைச் சேர்ந்த ரங்கன், கண்ணாக்குட்டி உட்பட ஐந்து பேர் போதையில், கண்டக்டர் சேகரிடம் தகராறு செய்தனர். தட்டிக்கேட்ட அவரை தாக்கவும் முயன்றனர். பின், நடுவேலம்பாளையத்துக்கு முன்பே பஸ்சிலிருந்து இறங்கிய ஐந்து பேரும், ரோட்டில் கிடந்த கற்களை எடுத்து பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடிகளை உடைத்தனர். இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு பல்லடம் போலீசில் டிரைவர் அருள் புகார் செய்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, பல்லடம் பகுதியில் இயங்கும் 10 மினி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் நேற்று காலை 10.00 மணிக்கு, மினி பஸ்களை பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி ஸடிரைக்கில் ஈடுபட்டனர். பின், அனைவரும் பல்லடம் ஸ்டேஷனுக்கு சென்று, நடவடிக்கை எடுக்க கோரி, இன்ஸ்பெக்டர் தவமணியிடம் கூறினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின் போராட்டத்தை கைவிட்டு, காலை 11.00 மணி முதல் வழக்கம்போல் பஸ்களை இயக்க ஆரம்பித்தனர்.


