ADDED : ஜூலை 24, 2011 02:26 AM
உடுமலை : உடுமலை நகராட்சி கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் 26, 27ம் தேதிகளில் நகரில் நீர் வினியோகம் இருக்காது.நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் அறிக்கையில், ''உடுமலை நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர் திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து உடுமலை நகரம் வரை அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதை சரி செய்யும் பணி, வரும் 26,27ம் தேதிகளில் நடக்கிறது; இரு நாட்களும் உடுமலை நகரில் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் நீரை சேகரித்து, சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; நீரை காய்ச்சி பயன்படுத்த வேண்டும்,'' என, கூறப்பட்டுள்ளது.


