/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஜெயில் வார்டன் பணி கோரிய மனுக்கள் உள்துறை செயலருக்கு ஐகோர்ட் உத்தரவுஜெயில் வார்டன் பணி கோரிய மனுக்கள் உள்துறை செயலருக்கு ஐகோர்ட் உத்தரவு
ஜெயில் வார்டன் பணி கோரிய மனுக்கள் உள்துறை செயலருக்கு ஐகோர்ட் உத்தரவு
ஜெயில் வார்டன் பணி கோரிய மனுக்கள் உள்துறை செயலருக்கு ஐகோர்ட் உத்தரவு
ஜெயில் வார்டன் பணி கோரிய மனுக்கள் உள்துறை செயலருக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூலை 26, 2011 12:51 AM
மதுரை : மதுரையில் எலும்பு குறைபாடுகளால் ஜெயில் வார்டன் பணி மறுக்கப்பட்ட இருவருக்கு, மறு மருத்துவசோதனை நடத்துவது குறித்த மனு மீது இரு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை செல்லூர் அக்னிக்குமார் தாக்கல் செய்த ரிட் மனுவில், ''நான் ஜெயில் வார்டன் கிரேடு 2 தேர்வுக்கு விண்ணப்பித்தேன். 2010 அக்., 4ல் நடந்த உடற்கூறு தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனால் ஆர்த்தோ குறைபாடு இருப்பதாக கூறி, என்னை அடுத்த கட்ட தேர்வுகளில் பங்கேற்க அனுமதி மறுத்து சிறை துறை கூடுதல் இயக்குனர் உத்தரவிட்டார். அதை ரத்து செய்ய வேண்டும்,'' எனக் கோரினார். திருமோகூரை சேர்ந்த சுரேஷூம், ''தனக்கு தட்டைகால்கள் இருப்பதாக கூறி, சிறை துறை கூடுதல் இயக்குனர் ஜெயில் வார்டன் பணி மறுத்து உத்தரவிட்டார். அதை ரத்து செய்ய வேண்டும்,'' எனக் கோரினார்.
மனுக்கள் நீதிபதி எஸ்.மணிக்குமார் முன் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ராகுல், ஸ்டாலின் ஆஜராயினர். அரசு தரப்பு வக்கீல் முகமது மூகைதீன், ''மனுதாரர்களுக்கு மறு மருத்துவ பரிசோதனை நடத்த கோரி உள்துறை செயலாளரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்,'' என்றார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''மனுதாரர்களை மறு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப அனுமதி கோரும் மனுவை இரு வாரங்களுக்குள் பரிசீலித்து உள்துறை செயலாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


