/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/லாரி - மினி லாரி மோதல் இரு டிரைவர்கள் பரிதாப பலிலாரி - மினி லாரி மோதல் இரு டிரைவர்கள் பரிதாப பலி
லாரி - மினி லாரி மோதல் இரு டிரைவர்கள் பரிதாப பலி
லாரி - மினி லாரி மோதல் இரு டிரைவர்கள் பரிதாப பலி
லாரி - மினி லாரி மோதல் இரு டிரைவர்கள் பரிதாப பலி
ADDED : ஜூலை 30, 2011 12:54 AM
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே, நின்றிருந்த லாரி மீது, முட்டை லாரி மோதியதில், இரண்டு டிரைவர்கள் இறந்தனர்.
மதுரை மாவட்டம், மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் சிவா, 24. இவர், சென்னையிலிருந்து நாமக்கல்லுக்கு மினி லாரியை ஓட்டிச் சென்றார். விழுப்புரம் அடுத்த அரசூர் அருகே, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, சாலையோரம் பழுதாகி நின்றிருந்த சரக்கு லாரி மீது, மினி லாரி மோதியது. இதில், மினி லாரி டிரைவர் சிவா, சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த மினி லாரி கிளீனர் வீரப்பன், 26, புதுச்சேரி அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சரக்கு லாரியை பழுது பார்த்துக் கொண்டிருந்த டிரைவர், முண்டியம்பாக்கம் அரச மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்து குறித்து, திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.