/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் 2 பேர் கைதுமணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் 2 பேர் கைது
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் 2 பேர் கைது
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் 2 பேர் கைது
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் 2 பேர் கைது
ADDED : ஜூலை 31, 2011 01:05 AM
கிருஷ்ணகிரி: பர்கூர் பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார் இருவரை கைது செய்தனர்.பர்கூர் எஸ்.ஐ., கோவிந்தசாமி மற்றும் போலீஸார் பர்கூர்-சிந்தகம்பள்ளி சாலையில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியே மணல் ஏற்றி வந்த டிராக்டரை சோதனை செய்த போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிந்து, மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர். எமக்கல்நத்தத்தை சேர்ந்த டிரைவர் சிவனை (40) என்பவரை போலீஸார் கைது செய்தனர். கந்திகுப்பம் எஸ்.ஐ., கண்ணன் மற்றும் போலீஸார் மருதேப்பள்ளி-செந்தாரப்பள்ளி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியே மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து டிரைவர் கண்ணனை கைது செய்தனர்.


