ADDED : ஆக 21, 2011 01:37 AM
கூடலூர் : தேக்கடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கொச்சுபம்பா வனப்பகுதியில் உள்ள வரையாடுகொக்கா என்ற இடத்தில் 2 ஆண் யானைகள், 2 பெண் யானைகள் இறந்து கிடந்தன.
இறந்து இரண்டு நாட்களுக்கு மேலானதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது.வனத்துறை இணை இயக்குனர் சஞ்சீவ் குமார் தலைமையில் வனத்துறையினர், இறந்த யானைகளை மீட்டனர். டாக்டர்கள் குழு பிரேத பரிசோதனை நடத்தியது. மின்னல் தாக்கி 4 யானைகளும் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.பரிசோதனைக்குப் பின், அப்பகுதியில் யானைகள் புதைக்கப்பட்டது. யானைகள் இறந்தையடுத்து மற்ற யானைகளை கண்காணிக்கும் பணியில் கேரள வனத்துறையினர் இறங்கியுள்ளனர்.


