Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி-நாசரேத் டயோசீசன் இன்ஜி.,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஏ.ஐ.சி.டி.இ.அனுமதி

தூத்துக்குடி-நாசரேத் டயோசீசன் இன்ஜி.,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஏ.ஐ.சி.டி.இ.அனுமதி

தூத்துக்குடி-நாசரேத் டயோசீசன் இன்ஜி.,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஏ.ஐ.சி.டி.இ.அனுமதி

தூத்துக்குடி-நாசரேத் டயோசீசன் இன்ஜி.,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஏ.ஐ.சி.டி.இ.அனுமதி

ADDED : ஆக 28, 2011 01:05 AM


Google News

நாசரேத் : தூத்துக்குடி-நாசரேத் டயோசீசன் இன்ஜி.,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஏ.ஐ.சி.டி.இ.

அனுமதி அளித்துள்ளது என்று நாசரேத் கல்லூரி தாளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ், முதல்வர் ஜெயக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி-நாசரேத் டயோசீசன் நிர்வாகத்தின் கீழ் நாசரேத்தில் ஜெயராஜ் அன்னபாக்கியம், சி.எஸ்.ஐ.இன்ஜி.,கல்லூரியும், சாயர்புரத்தில் போப் இன்ஜி.,கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி டயோசீசனிலிருந்து தூத்துக்குடி-நாசரேத் டயோசீசன் பிரிக்கப்பட்டதினால் ஏற்பட்ட நிலம் மாறுதல் தொடர்பாக இக்கல்லூரிகளில் ஏ.ஐ.சி.டி.இ. 2011-2012 க்கான மாணவர்கள் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இதன் பேரில் தூத்துக்குடி-நாசரேத் டயோசீசன் சார்பில் ஏ.ஐ.சி.டி.இ.ல் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை பரிசீலித்த ஏ.ஐ.சி.டி.இ. 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து ஆய்வு செய்ய முடிவு செய்தது. அதன் பேரில் 3 பேர் கொண்ட நிபுணர்குழு நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம், சி.எஸ்.ஐ.இன்ஜி.,கல்லூரியையும், சாயர்புரம் போப் இன்ஜி.,கல்லூரியையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதனடிப்படையில் ஏ.ஐ.சி.டி.இ.,மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து ஆணை பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம், சி.எஸ்.ஐ.இன்ஜி.,கல்லூரியிலும், சாயர்புரம் போப் இன்ஜி.,கல்லூரியிலும் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கையும் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் நேரடி சேர்க்கையும் தற்போது நடந்து வருகிறது இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us