/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தார்பாய் போடாமல் உலா வரும் லாரிகளால் பொதுமக்கள் அவதிதார்பாய் போடாமல் உலா வரும் லாரிகளால் பொதுமக்கள் அவதி
தார்பாய் போடாமல் உலா வரும் லாரிகளால் பொதுமக்கள் அவதி
தார்பாய் போடாமல் உலா வரும் லாரிகளால் பொதுமக்கள் அவதி
தார்பாய் போடாமல் உலா வரும் லாரிகளால் பொதுமக்கள் அவதி
ADDED : ஆக 30, 2011 12:48 AM
பல்லடம் : பல்லடம், பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் கட்டுமான பணிக்கு கரூர் பகுதியில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மணல் எடுத்து வரப்படுகிறது.
மணல் ஏற்றி வரும் லாரிகள் பல, தார்பாய் போட்டு மணலை மூடி எடுத்து வருவதில்லை.இதன் காரணமாக, லாரியில் இருந்து கீழே சிதறி விழும் மணல், பல்லடம் பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சில நேரங்களில் சம்பந்தப்பட்ட இடத்தில் மணலை இறக்கும் லாரிகள் முழுமையாக சுத்தப்படுத்தாமல் வருவதால், அதில் இருந்து விழும் மணல் ரோட்டில் போவோர் கண்ணில் பட்டு, நிலைகுலையச் செய்கிறது.வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி, கீழே விழுந்து படுகாயம் அடைந்துள் ளனர். சிலர் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. எனவே, தார்பாய் போடாமல் லாரிகளில் மணல் எடுத்து வரும் லாரிகள், மணல் இறக்கிய பின் சுத்தம் செய்யாமல் செல்லும் லாரிகள் மீது வருவாய்த் துறையினர், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.


