/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தென்னிந்திய தடகளம் கி.கிரி மாணவர் வெற்றிதென்னிந்திய தடகளம் கி.கிரி மாணவர் வெற்றி
தென்னிந்திய தடகளம் கி.கிரி மாணவர் வெற்றி
தென்னிந்திய தடகளம் கி.கிரி மாணவர் வெற்றி
தென்னிந்திய தடகளம் கி.கிரி மாணவர் வெற்றி
ADDED : செப் 03, 2011 12:18 AM
கிருஷ்ணகிரி: ஆந்திரா மாநிலம் ஹைதாரபாத்தில் நடந்த தென்னிந்திய அளவிலான தடகள போட்டியில் கிருஷ்ணகிரி விளையாட்டு விடுதி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் ஹைதாரபாத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தென்னிந்திய அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இதில் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த வீரர் வீராங்கணைகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாணவர் விளையாட்டு விடுதியின் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 400 மீட்டர் ஓட்டத்தில் ராமச்சந்திரன் தங்கப்பதக்கமும், 100 மீ., மற்றும் 200 மீ., ஓட்டத்தில் கார்த்திகேயன் தங்கப்பதக்கமும், 100 மீட்டர் ஓட்டத்தில் அருண் தங்கப்பதக்கமும், ராஜாங்கம் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சி அளித்த பயிற்சியாளர் இளம்பரிதிøயுயும் மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ் மற்றும் அதிகாரிகள் பராட்டினார்கள்.


