பரமக்குடியில் நீதிபதி சம்பத் விசாரணை துவக்கம்
பரமக்குடியில் நீதிபதி சம்பத் விசாரணை துவக்கம்
பரமக்குடியில் நீதிபதி சம்பத் விசாரணை துவக்கம்
ADDED : செப் 27, 2011 09:48 PM

பரமக்குடி: பரமக்குடியில் செப்.,11ல் நடந்த, கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத், நேற்று பரமக்குடியில் விசாரணையை துவக்கினார்.
பரமக்குடியில் கடந்த செப்.,11ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு வந்தவர்கள் மறியலில் ஈடுபட்டதோடு கல்வீச்சிலும், போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஆறு பேர் பலியாகினர். இதுதொடர்பாக, விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில், ஒருநபர் விசாரணை கமிஷனை அரசு நியமித்தது. நீதிபதி சம்பத் நேற்று பரமக்குடிக்கு வந்தார். கலவரம் நடந்த, ஐந்து முனை ரோடு பகுதியை பார்வையிட்டார். பின்னர் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்றார். துப்பாக்கி சூட்டில் பலியான மற்றும் பாதித்தவர்கள் வசிக்கும், ஆறு ஊர்களுக்கு சென்று, பாதித்தோரின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார். இவருடன் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியும், முன்னாள் சட்டப்பணி ஆணைக்குழு தலைவர் அக்பர், விசாரணைக் கமிஷன் செயலர் ஜேம்ஸ், விசாரணைக் கமிஷன் அதிகாரி பத்ரோஸ், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி பாலசுந்தரகுமார், பரமக்குடி நீதிபதி ஸ்ரீனிவாசன், மீரா பரமேஸ்வரி ஆர்.டி.ஓ., ஆகியோர், உடன் சென்றனர்.


