Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாநகராட்சி தேர்தலில் 31 பேருக்கு மீண்டும் சீட் : சிட்டிங் கவுன்சிலர்கள் வெற்றி பெறுவரா?

மாநகராட்சி தேர்தலில் 31 பேருக்கு மீண்டும் சீட் : சிட்டிங் கவுன்சிலர்கள் வெற்றி பெறுவரா?

மாநகராட்சி தேர்தலில் 31 பேருக்கு மீண்டும் சீட் : சிட்டிங் கவுன்சிலர்கள் வெற்றி பெறுவரா?

மாநகராட்சி தேர்தலில் 31 பேருக்கு மீண்டும் சீட் : சிட்டிங் கவுன்சிலர்கள் வெற்றி பெறுவரா?

ADDED : அக் 04, 2011 01:06 AM


Google News
சேலம் : சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள், 31 பேருக்கு, பிரதான கட்சிகள் சார்பில் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடுமையான போட்டி நிலவுவதால், சிட்டிங் கவுன்சிலர்கள் வெற்றி பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சேலம் மாநகராட்சி தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், 10 சிட்டிங் கவுன்சிலருக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1வது வார்டு கவுன்சிலர் தியாகராஜன், கடந்த ஐந்து ஆண்டாக மன்ற கூட்டங்களில் வார்டு பிரச்னைகள் குறித்து பேசியதில்லை. அவரது வார்டில், சுகாதாரம் மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது. 3வது வார்டு கவுன்சிலர் பாலு, கடந்த முறை சீட் கிடைக்காத அதிருப்தியில், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று, மீண்டும், அ.தி.மு.க., வில் இணைந்தார். இவரது வார்டில் குடிநீர் பிரச்னை பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. மாநகராட்சி , 16வது வார்டு கவுன்சிலராக பிரகாஷ்அப்பாத்துரை உள்ளார். ஓடை பகுதியில் வீசப்படும் கழிவுகளால், இவரது வார்டில் சுகாதார சீர்கேடு தலை தூக்கியுள்ளது. சுகாதார பிரச்னை தீர்வு காண எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 20வது வார்டு கவுன்சிலர் மணி, மாநகராட்சி கூட்டங்களுக்கு வந்து போவதே தெரியாது. குடிநீர் பிரச்னையில் இவரது வார்டும் விதிவிலக்கல்ல. 34வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ். இவரது வார்டில் குடிநீர் பிரச்னை அடிக்கடி விஸ்வரூபம் எடுக்கும். சுகாதாரமும் கேள்விக்குறிதான். இந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சி, 38 வது வார்டு கவுன்சிலர் மாணிக்கம். இந்த வார்டில், சாக்கடை கழிவுகளால், கடுமையான சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. 40வது வார்டு கவுன்சிலர் பெருமாள்சாமி. பச்சப்பட்டி பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு, இவருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. 45வது வார்டு கவுன்சிலர் கீதா. காலனி வீடுகள் நிறைந்த இவரது வார்டில், பல ஆண்டாக தூர்வாரப்படாமல் சாக்கடைகள் இருப்பதும், 9 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதும் பின்னடைவாகும். மாநகராட்சி, 46 வது வார்டு கவுன்சிலர் பாலசுப்ரமணியம். இவரது வார்டில் குடிநீர் பிரச்னை மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 56வது வார்டு கவுன்சிலர் நாகேந்திரன். களரம்பட்டி பகுதியை உள்ளடக்கிய இவரது வார்டில், சாயப்பட்டறைகள் அதிகம் இருப்பதால், மாசு கலந்து குடிநீர் விநியோகம் மிகப்பெரிய பிரச்னை. தி.மு.க., சார்பில், 16 சிட்டிங் கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 5வது வார்டு கவுன்சிலர் சாந்தி. குண்டும், குழியுமாக, சீரழிந்து கிடைக்கும் சாலைகள், வார்டில்ஒரு பகுதியில் மேட்டூர் குடிநீர் வினியோகம் இல்லாமை, ஆகியவை மிகப்பெரிய பின்னடைவு. 9வது வார்டு கவுன்சிலர் ராமசாமி ஏற்கனவே, மூன்று முறை வெற்றி பெற்றவர். இந்த வார்டில் என்.ஜி.ஓ., காலனி பகுதி சாக்கடை தீவாக காட்சி அளிக்கிறது. சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காதது பின்னடைவு. மாநகராட்சி, 13வது வார்டு கவுன்சிலர் விவேகானந்தன். ஜான்சன்பேட்டை, மணக்காடு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் சுகாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. குப்பை தொட்டிகள் வைக்கக் கூட, நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இவர் மீதான அதிருப்தி. 15வது வார்டு கவுன்சிலர் செல்வி. இவரது வார்டில் முறைப்படி குப்பை அகற்றப்படுவதில்லை, அடிக்கடி குடிநீர் பிரச்னைகளும் நிலவியது. முறையான நடவடிக்கை எடுக்காததால், இவருக்கு சிக்கல். 17வது வார்டு கவுன்சிலர் மாசிலாமணி. அதிக வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் நிறைந்த இவரது வார்டில், குப்பைகளை சரியாக வெளியேற்ற முடியாத அவலம் பல ஆண்டாக நீடித்து வருகிறது. ஏற்கனவே, மூன்று முறை கவுன்சிலராக இருந்த மாசிலாமணி, குப்பை விவகாரத்துக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இது, இவர் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி, 18வது வார்டு கவுன்சிலர் சரவணன். சூரமங்கலம் மண்டல குழு தலைவராகவும் இருக்கிறார். மன்ற கூட்டங்களில் அதிகம் பேசியதல்லை. இவரது வார்டில் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. 23வது வார்டு கவுன்சிலர் உஷாராணி. இவரது வார்டில் குடிநீர் பிரச்னை, முறைப்படுத்தப்படாத சாக்கடை ஆகியவற்றால், அதிருப்தி நிலவுகிறது. 30 வது வார்டு கவுன்சிலர் ராமு. அங்கம்மாள் காலனி நில விவகாரத்தில் சிக்கியவர். குடிநீர், சுகாதாரம் ஆகியவை பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. 33வது வார்டு கவுன்சிலர் கபீர். மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டப்படுவது, வெள்ளக்குட்டை ஓடை சீரமைப்பு பணியில் தொய்வு ஆகியவை கபீருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 35வது வார்டு கவுன்சிலர் ஆரிவ்வுன்னிஷா. குடிநீர், சுகாதார பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. 37வது வார்டு கவுன்சிலர் திருஞானம். குமரகிரி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள இவரது வார்டில் குரங்கு பிரச்னை பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. வார்டின் பல பகுதிகளில் முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படாதது பின்னடைவு. மாநகராட்சியின், 41வது வார்டு கவுன்சிலர் பூங்கொடி மன்ற கூட்டங்களில் அதிகம் பேசாததால், குடிநீர், சுகாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. 42 வது வார்டு கவுன்சிலர் சரளாவுக்கு, சீரமைக்கப்படாத சாலைகளால் பின்னடை ஏற்பட்டுள்ளது. 43வது வார்டு கவுன்சிலர் அசோகன். மண்டல குழு தலைவரான இவரது வார்டில் பன்றிகள், நாய் தொல்லை ஆகியவற்றால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அவற்றை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. 47வது வார்டு கவுன்சிலர் விஜயா. சீரமைக்கப்படாத சாலையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சாக்கடை கழிவுகளுடன் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. வார்டின் ஒரு சில பகுதிகளில் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. மன்ற கூட்டத்தில் வாய் பேசாத விஜயா, பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கவில்லை. கவுன்சிலர் அசோகனுடைய, 54 வது வார்டில் வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குப்பை தொட்டி இல்லாமல், பல இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பா.ம.க., சார்பில் சிட்டிங் கவுன்சிலர்கள் நான்கு பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, கவுன்சிலர் தனசேகரனின், 7வது வார்டில் குடிநீர், சுகாதார பிரச்னைகளால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கவுன்சிலர் கலைச்செல்வியின், 22வது வார்டில் குடிநீர் பிரச்னை, சாக்கடை கழிவுகள் தேக்கம் உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. கவுன்சிலர் பெரியண்ணனின் 24வது வார்டில் சீரழிந்த சாலை, முறையான குடிநீர் வினியோகம் இல்லாதது, சுகாதார சீர்கேடு என்று ஒட்டு மொத்த பிரச்னைகளின் விஸ்வரூபமாக காட்சியளிக்கிறது. இவரது வார்டில், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. கவுன்சிலர் தமிழ்செல்வியின், 27வது வார்டில், குடிநீர் விநியோகம், சுகாதாரம் ஆகியவை கேள்வி குறியாக உள்ளது. தே.மு.தி.க., சார்பில், 53வது வார்டில் வெற்றி பெற்ற சொர்ணாதேவிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரது வார்டில் குடிநீர் பிரச்னை, கொசு மருந்து அடிப்பது, சாக்கடை தூர்வாருதல் உள்ளிட்ட பிரச்னைகள் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை, 'சிட்டிங்' கவுன்சிலராக பொறுப்பு வகித்த, 31 பேருக்கு (காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தவிர) மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதில், பல வார்டுகளில் குடிநீர், சுகாதாரம் ஆகிய பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், வெற்றி பெறுவார்களா என கேள்வி எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us